பள்ளமான ரோடுகள்;தேங்கிய மழைநீர்; கையில் சூலாயுதத்துடன் ஆவேசத்தில் தோன்றிய துர்க்கா தேவி


பள்ளமான ரோடுகள்;தேங்கிய மழைநீர்; கையில் சூலாயுதத்துடன் ஆவேசத்தில் தோன்றிய துர்க்கா தேவி
x

பள்ளமான ரோடுகள்;தேங்கிய மழைநீர்;சிறுமி துர்கா வேடமணிந்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்.

பெங்களூரு

கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் பல்வேறு இடங்களில் உள்ள ரோடுகள் சேதமடைந்துள்ளன. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் மழை நேரங்களில் ரோட்டில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உப்பள்ளியில் உள்ள ரோடு பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் ஹர்சிதா (வயது 9) என்ற சிறுமி துர்க்கை அம்மன் வேடத்தில் தலையில் கிரீடம், கையில் சூலாயுதத்துடன் நடந்து சென்றார்.

திடீரென்று ஒரு சிறுமி ரோடு பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்வதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.


Next Story