பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை - மோடிக்கு சத்யபால் மாலிக் எச்சரிக்கை


பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை -  மோடிக்கு சத்யபால் மாலிக் எச்சரிக்கை
x

அதிகாரம் வரும்,போகும் பிரதமர் மோடி இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்யபால் மாலிக் பேசியதாவது,

அக்னிபாத் ராணுவ ஆள்சேர்ப்பு திட்டம் ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரம் இல்லை, அப்பதவியில் இருந்து ஒருநாள் விலக வேண்டுமென்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் நாட்களில் நாட்டில் பல தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட தொடங்குவார்கள்.

நாட்டில் பல வகையான போராட்டங்கள் தொடங்கும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். விவசாயிகளின் போராட்டம் விரைவில் தொடங்கும், இளைஞர்களின் இயக்கமும் தொடங்கும் என என மேகலயா முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்துப் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக சத்யபால் மாலிக் கூறியது குறிப்பிடத்தக்கது.


Next Story