ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை


ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை
x

பராமரிப்பு பணி காரணமாக ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் என பெஸ்காம் அறிவித்துள்ளது.

பெங்களூரு:

பராமரிப்பு பணி காரணமாக ராஜாஜிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் என பெஸ்காம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணி

இதுகுறித்து பெஸ்காம் மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெங்களூருவில் 22-ந் தேதி (இன்றும்), 23-ந் தேதி (நாளையும்) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஆனந்தஹள்ளி, கவுரிஹள்ளி, எல்லாப்புரா, அரப்பனஹள்ளி புறநகர், பாகலி, அரப்பனஹள்ளி டவுன், குமரனஹள்ளி, கோட்டூர் சாலை, ஐ.பி. சர்க்கிள், பி.ஆர்.புரா, டி.பி. கொட்டூரஹள்ளி, எஸ்.டி.பி. கைதிகுண்டே, அக்கூர், ஜாலமங்களா, கைசாப்பூர், மஞ்சுநாதா நகர், சிவநகர், காயத்ரி நகர், பிரகாஷ் நகர்,

விஜயநகர், ராஜாஜிநகர் 2-வது பிளாக், 6-வது பிளாக், அமரஜோதி நகர் உள்பட ராஜாஜிநகரின் பல்வேறு பகுதிகள், சுப்ரமணியா நகர், தாசரஹள்ளி, இந்திராநகர், டெலிகாம் லே-அவுட், ஆர்.பி.சி. லே-அவுட், ஹம்பிநகர், அக்ரஹாரா, சந்திரா லே-அவுட், மைசூரு சாலை சந்திப்பு, விசினிட்டி, ஆர்.ஆர்.நகர், நாயண்டஹள்ளி, பேடராயனபுரா, லிங்கதஹள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும்.

ராஜாஜிநகர் 62-வது கிராஸ்

இதேபோல் நாளை (வியாழக்கிழமை) தேவசமுத்திரா, முருடி, தம்மனஹள்ளி, பன்ட்ராவி, ஜே.பி.ஹள்ளி, ராமபுரா, பி.டி.ஹள்ளி, அனுமனகுட்டா, மஞ்சுநாதா நகர், சிவாநகர், காயத்ரி நகர், பிரகாஷ்நகர், விஜயாநகர், ராஜாஜிநகர் 62 -வது கிராஸ், அமரஜோதி நகர், சரஸ்வதி நகர், விநாயகா லே-அவுட், தாசரஹள்ளி, அக்ரஹாரா, இந்திராநகர், சங்கரா மடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மேற்கண்ட பகுதிகளில் இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story