அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு; வயிற்றிலேயே சிசுவும் உயிரிழந்த பரிதாபம்


அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு; வயிற்றிலேயே சிசுவும் உயிரிழந்த பரிதாபம்
x

பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகளின் அலட்சியத்தால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியும், அவரது வயிற்றிலேயே சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோலார் தங்கவயல்:

பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகளின் அலட்சியத்தால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணியும், அவரது வயிற்றிலேயே சிசுவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்ப்பிணி சாவு

கோலார் மாவட்டம், பங்காருபேட்டை டவுன் சாந்திநகரை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பாரதி(வயது 28). நிறைமாத கர்ப்பிணியான பாரதிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மஞ்சுநாத் மற்றும் உறவினர்கள் பாரதியை பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாரதிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் பாரதி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றிலேயே சிசுவும் உயிரிழந்தது. இந்த சம்பவம் சாந்திநகர் முழுவதும் பரவியது.

லஞ்சம்

மஞ்சுநாத் மற்றும் பாரதியின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்காருபேட்டை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பங்காருபேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மஞ்சுநாத் கூறுகையில், 'என் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து அனுமதித்தபோது டாக்டருக்கு ரூ.2 ஆயிரமும், 2 நர்சுகளுக்கு தலா ரூ.500-ம், ஊழியர்கள் பலருக்கு தலா ரூ.200-ம் லஞ்சமாக கொடுத்தேன். அப்படியிருந்தும் எனது மனைவியை அவர்கள் காப்பாற்றவில்லை' என்று குற்றம் சாட்டினார். இச்சம்பவம் குறித்து பங்காருபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story