ஜனாதிபதி முர்மு ஒடிசாவில் இன்று முதல் 3 நாள் சுற்றுப்பயணம்


ஜனாதிபதி முர்மு ஒடிசாவில் இன்று முதல் 3 நாள் சுற்றுப்பயணம்
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவில் இன்று முதல் 27-ந்தேதி வரை 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவுக்கு இன்று வருகை தருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதுபற்றி ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒடிசாவுக்கு ஜூலை 25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அவர் மருத்துவ மாணவர்கள் அடங்கிய குழுவினருடன் உரையாற்ற உள்ளார். இன்று மாலை புவனேஸ்வரில் உள்ள ராஜ்பவனில் ஒரு புதிய கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார் என தெரிவித்து உள்ளது.

இதன்பின்பு, நாளை கட்டாக் நகரில் உள்ள ஒடிசா ஐகோர்ட்டின் 75-வது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். அதே நாளில் கட்டாக்கில் உள்ள தேசிய சட்ட பல்கலை கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இதன்பின், வருகிற 27-ந்தேதி ராஜ்பவனில் ஆபத்து நிலையில் உள்ள பழங்குடி குழுக்களுடன் அவர் உரையாற்ற உள்ளார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.


Next Story