மணிப்பூர் விவகாரம்: ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சிகள் இன்று சந்திப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் இன்று சந்திக்க உள்ளன.
புதுடெல்லி,
மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தி வருகிறது. அதற்காக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் 21 பேர், கடந்த வாரம் 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்று வந்தனர். அங்குள்ள நிலவரத்தை 'இந்தியா' கூட்டணி தலைவர்களிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து, இப்பிரச்சினையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தலையீட்டை இந்தியா கூட்டணி கோரியுள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் முைறயிட நேரம் ஒதுக்கக்கோரி, ஜனாதிபதிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.
இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களை இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணிக்கு சந்திக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கி உள்ளார்.
Related Tags :
Next Story