சிக்கிம் விபத்து: 16 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி, ஜனாதிபதி இரங்கல்
ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் வடக்கு பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 16 ராணுவர்கள் உயிரிழந்தனர்.
இன்று காலையில் சாட்டன் என்ற பகுதியிலிருந்து 3 ராணுவ வாகனம், தாங்கு என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜெமா என்ற பகுதியில் உள்ள வளைவு பாதையில் செல்லும் போது, ஒரு வாகனமானது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த வீரர்கள் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம், இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்:
சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிர் இழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சிக்கிமில் நடந்த சாலை விபத்தில் வீரம் மிகுந்த ராணுவ வீரர்களின் உயிர் இழப்பு வேதனை அளிக்கிறது.
பிரதமர் மோடி இரங்கல்:
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு துறை மந்திரி இரங்கல்:
சாலை விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு, இந்திய தேசம் மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி:
சாலை விபத்தில் 16 துணிச்சலான ராணுவ வீரர்களின் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனகாங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.