ஜனாதிபதியின் சுதந்திர தின தேநீர் விருந்து..கலந்து கொண்ட பிரதமர் மோடி..!


ஜனாதிபதியின் சுதந்திர தின தேநீர் விருந்து..கலந்து கொண்ட பிரதமர் மோடி..!
x

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் தேநீர் விருந்து அளித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது . டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி, முப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோட்டை கொத்தளத்தில் 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிலையில் நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லி ராஷ்டிரபதி பவனில் தேநீர் விருந்து அளித்தார்.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி அளிக்கும் தேநீர் விருந்து பிரபலமான வழக்கம் ஆகும். அந்த வகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தேநீர் விருந்து அளித்தார்

இதில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது துணைவர் சுதேஷ் தன்கர் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இவர்கள் மட்டுமின்றி மத்திய மந்திரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.


Next Story