பிரதமர் மோடி, பில்கேட்ஸ் சந்திப்பு..!
இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட எனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் சந்தித்து உரையாடியுள்ளார்.இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
பில்கேட்ஸை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். சிறந்த மற்றும் நிலையான பூமியை உருவாக்குவதற்கான அவரது கொள்கை தெளிவாக தெரிகிறது எனக் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் கூறுகையில்,
பிரதமர் மோடியுடனான எனது சந்திப்பானது சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலை ஆகியவற்றில் இந்தியா அடைந்து வரும் முன்னேற்றம் குறித்து முன் எப்போதையும் விட எனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story