போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு..!


போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி பாராட்டு..!
x

போர் விமானத்தில் பறந்த ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு அசாம் மாநிலத்தில் 3 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் அவர் முப்படைகளின் உச்சத்தளபதி என்ற முறையில், தேஜ்பூர் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கிருந்து அவர் 25 நிமிடம் சுகோய் ரக போர் விமானத்தில் பறந்தார்.

இதுதான் போர் விமானத்தில் அவரது முதல் பயணம். இதன் மூலம் போர் விமானத்தில் பறந்த நாட்டின் 3-வது ஜனாதிபதி என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ஜனாதிபதிகளாக இருந்த பிரதிபா பாட்டீலும், அப்துல் கலாமும் போர் விமானத்தில் பறந்துள்ளனர். இந்த போர் விமானப்பயணம் நன்றாக இருந்ததாகக்கூறி ஜனாதிபதி திரவுபதி முர்மு மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இந்தப் போர் விமானப்பயணத்தை பிரதமர் மோடி பாராட்டி நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப்பதிவில் அவர், "இது ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. ஜனாதிபதி சிறப்பான தலைமைத்துவத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்" என கூறி உள்ளார்.


Next Story