அசாமில் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!
அசாமில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
அசாம்,
பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி (இன்று) 14 ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது கவுகாத்தியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க்கிறார். சுமார் 14 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் இந்த எய்ம்ஸ் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நல்பாரி, கோக்ரஜார் மற்றும் நாகோன் மாவட்டங்களில் புதிய மருத்துவமனை கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மூன்று மருத்துவ கல்லூரிகளும் சுமார் ரூ. 615 கோடி, ரூ. 600 கோடி மற்றும் ரூ. 535 கோடி செலவில் கட்டப்பட்டடுள்ளது.
மேலும், அசாம் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெ்ட் நிறுவனத்தின், மெத்தனால் ஆலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். அடுத்ததாக, பிரம்மபுத்திரா ஆற்றின் மீது புதியதாக கட்டப்பட்டுள்ள பாலம். இந்த பாலம் , பாலஷ்புரி- சுவல்குச்சி பகுதியினை இணைக்கும் வண்ணம் உள்ளது மற்றும் ஐ.ஐ,டி. கவுஹாத்தியில் அதிநவீன மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நல திட்டங்ளையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.