இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80 பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இளையராஜாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,
அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இசையமைப்பாளர் இளையராஜா
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என இதுவரை 1000 படங்களுக்கும் மேல் 7000 பாடல்களுக்கும் மேல் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில், இளையராஜா தனது 80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளையராஜா இன்று 80-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், தொலைபேசி மூலம் பிரதமர் மோடி தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதாக பிரதமர் மோடி அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story