மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரை


மக்களவையில் பிரதமர் மோடி இன்று உரை
x
தினத்தந்தி 5 Feb 2024 9:00 AM IST (Updated: 5 Feb 2024 10:37 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் இன்று பேசுகிறார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்.2-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், இது முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி மக்களவையில் இன்று மாலை 5 மணி அளவில் பேசுகிறார். நாளை மாநிலங்களவையில் பேசுகிறார். மக்களவைக்கு இன்று அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் இந்த அமர்வு எதிர்ப்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.


Next Story