நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
இந்தியா-நேபாளம் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தாஹல் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரையாடலின் போது இந்தியா-நேபாளம் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் மறுஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நேபாள பிரதமரின் இந்திய பயணத்தின் போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்தும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையில் நேபாளம் முக்கிய பங்குதாரராக உள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story