ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு நிறைவு: திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
"ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்த திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். பொது சேவையில் அவரது அயராத அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கிறது. அவரது பல்வேறு சாதனைகள் அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன." இவ்வாறு பிரதமர் அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story