நாடாளுமன்ற எம்.பிக்களுடன் 'குழு புகைப்படம்' எடுத்த பிரதமர் மோடி


நாடாளுமன்ற எம்.பிக்களுடன்  குழு புகைப்படம் எடுத்த பிரதமர் மோடி
x

நாடாளுமன்ற எம்.பிக்களுடன் பிரதமர் மோடி ‘குழு புகைப்படம்’ எடுத்துக்கொண்டார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று பழைய கட்டிடத்தில் விவாதம் நடைபெற்றது. இன்று முதல் புது கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது. மதியம் ஒரு மணியளவில் புதிய கட்டிடத்தில் இரு அவைகளும் தொடங்க இருக்கின்றன.

இந்த நிலையில் காலை10 மணியளவில் பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகம் வந்தார். இரு அவைகளின் உறுப்பினர்களும் நாடாளுமன்றம் வந்தனர். அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு புகைப்பட அமர்வின் போது பாஜக எம்பி நர்ஹரி அமீன் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் குணமடைந்து புகைப்பட அமர்வில் பங்கேற்றார்.


Related Tags :
Next Story