இன்றைய உலகில் கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் - பிரதமர் மோடி


இன்றைய உலகில் கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் - பிரதமர் மோடி
x

கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களின் வளர்ச்சியாக இருக்கும்.

புதுடெல்லி,

டெல்லி செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

கலை எந்த வடிவத்தில் இருந்தாலும், அது எப்போதும் இயற்கையுடன் நெருக்கமாகப் பிறக்கிறது. கலை என்பது இயற்கைக்கு சார்பானது, சுற்றுச்சூழலுக்கும், காலநிலைக்கும் ஆதரவானது. கேதார்நாத், காசி போன்றவை நமது பண்பாட்டு மையங்களின் வளர்ச்சியாக இருக்கும். இன்றைய உலகில் கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

சர்வதேச அருங்காட்சியக் கண்காட்சி, நூலகங்களின் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் ஊக்குவிப்போம். இலக்கை அடையும் வகையில், 'ஆத்மநிர்பர் பாரத்' வடிவமைப்பு மையம் திறக்கப்பட்டது. இந்த மையம் நாட்டிலுள்ள தனித்துவமான மற்றும் அரிய கைவினைப் பொருட்களுக்கான மேடையை வழங்கும் என்றார்.


Next Story