'பிருத்வி-2' ஏவுகணை சோதனை வெற்றி..!


பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி..!
x

கோப்புப்படம் :PTI 

தினத்தந்தி 15 Jun 2022 10:33 PM GMT (Updated: 2022-06-16T04:03:47+05:30)

பிருத்வி- 2 ஏவுகணை நேற்றுசோதிக்கப்பட்டது.

பாலசோர்,

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நடுத்தர வகை ஏவுகணையான பிருத்வி- 2 நேற்று இரவு ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது.

இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் பெற்றது.500 கிலோ வெடிபொருட்களுடன் 350 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் பெற்றவை ஆகும். எனினும் 1000 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களையும் சுமந்து செல்ல இதை பயன்படுத்த முடியும்.

நேற்று சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்ட பிருத்வி- 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

.


Next Story