தனியார் பஸ் கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் பஸ் கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் தனியார் பஸ் கிளீனர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளியில் வசித்து வந்தவர் தீபக் (வயது 21). இவரது சொந்த ஊர் மைசூரு ஆகும். மாதநாயக்கனஹள்ளியில் சகோதரி வீட்டில் தங்கி இருந்து அவர், தனியார் பஸ்சில் கிளீனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், தனது சகோதரி வீட்டில் இல்லாத போது திடீரென்று தீபக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியே சென்றிருந்த சகோதரி வீட்டுக்கு திரும்பிய போது தீபக் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். காதல் தோல்வி விவகாரத்தில் அவர் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story