தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பெங்களூருவில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிவபுராவில் வாடகை வீட்டில் வசித்தவர் துஷ்யந்த் (வயது 28). இவரது சொந்த ஊர் தாவணகெரே ஆகும். பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக அவர் வேலை பார்த்து வந்தார். துஷ்யந்திற்கு தாவணகெரேயில் ஏராளமான நிலம் உள்ளது. ஆனாலும் பெங்களூருவுக்கு வந்து அவர் வேலை செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கி இருந்த வீட்டின் அறையில் தூக்குப்போட்டு துஷ்யந்த் தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை முடிவை எடுத்தார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story