தனியார் நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் மோசடி; உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு


தனியார் நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் மோசடி; உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
x

சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் பணம் வசூலித்த தனியார் நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளது .உரிமையாளர் உள்பட 2 பேருக்கு வலைவீசி தேடிவருகின்றனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் வினோபா நகர் பகுதியை சேர்ந்தவர் சிந்தூர. இவர் சேமிப்பு திட்டத்தின் கீழ் பணத்தை சேமிக்க முடிவு செய்தார். அதற்காக அவர் கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்தார்.


இந்த திட்டத்தில் முதிர்வு தொகை ரூ.1 லட்சம் ஆகும். இந்த நிலையில் சேமிப்பு திட்டம் முதிர்வடைந்த நிலையில் சேமிப்பு தொகையான ரூ.1 லட்சத்தை கேட்டுள்ளார். அப்போது நிதி நிறுவனம் சார்பில் ஒரு காசோலை வழங்கப்பட்டது. அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பியது.

இதையடுத்து அவர் நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என கூறியதாக தெரிகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் உடனடியாக இதுகுறித்து வினோபா போலீசில் புகார் அளித்தார்.


அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், நிதி நிறுவன உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நிறுவன மேலாளரான சந்தோஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story