மைசூரு ஓட்டலில் நெய் தோசை சுட்டு ருசித்து சாப்பிட்ட பிரியங்கா காந்தி
மைசூரு ஓட்டலில் நெய் தோசை சுட்டு ருசித்து சாப்பிட்ட பிரியங்கா காந்தி வீட்டிலும் சுட்டு சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார்.
மைசூரு:-
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கர்நாடக தேர்தல் களத்தில் முதல் முறையாக பிரசாரத்திற்காக நேற்று முன்தினம் வந்தார். இந்த நிலையில் மைசூருவில் தங்கியிருந்த பிரியங்கா காந்தி நேற்று மைசூரு டவுன் அக்ரஹாராவில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவர் தோசை கல்லில் மாவு ஊற்றி தோசை சுட்டார். முதலில் அவர் ஒரு பாத்திரத்தில் இருந்த மாவை எடுத்து தோசை கல்லில் ஊற்றி 4 தோசைகள் சுட்டார். அவர் தோசையை மாற்றி போட தாமதம் ஆனதால் தோசைகள் கருகின.
உடனே அருகில் இருந்த சமையல் தொழிலாளி, தோசை சிறிது நேரத்திலேயே மாற்றி போட வேண்டும் என்று கூறினார். உடனே பிரியங்கா காந்தியும் ஒவ்வொரு தோசையாக மாற்றி போட்டார். அதன் மீது சமையல் தொழிலாளி பாக்கெட்டில் இருந்த நெய்யை ஊற்றினார். அதுபற்றி அந்ததொழிலாளியிடம் பிரியங்காகாந்தி கேட்டறிந்தார். அதற்கு அவர் நெய் தோசை என கூறினார். பிரியங்கா காந்தி முதலில் சுட்ட தோசைகள் லேசான கருகியபடி இருந்ததால், மீண்டும் அவர் ஒரு தோசையை சுட்டார். அந்த தோசை கருகாமல் இருந்தது. பின்னர் தான் சுட்ட தோசை பிரியங்கா காந்தி ருசித்து சாப்பிட்டார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், "இந்த ஓட்டலில் தோசை சுட்டு சாப்பிட்டேன். இட்லியும், தோசையும் சாப்பிட சுவையாக இருந்தது. சுவையாக எப்படி இட்லி, தோசை மாவு எப்படி தயாரிப்பது, அதன் பக்குவம் மற்றும் செய்முறை பற்றி ஓட்டல் உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். நானும் அதை முறையில் இட்லி, தோசையை வீட்டில் சமைத்து சாப்பிட ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.
அப்போது உடன் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.