அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை


அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு - மீன்பிடிக்க தடை
x

மங்களூர் அருகே அரபிக் கடலில் மூழ்கிய சிரியா நாட்டு சரக்கு கப்பல்

மங்களூரு அருகே அரபிக் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்து எண்ணெய் கசிவதால் சுற்றியுள்ள பகுதியில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு:

மலேசியாவில் இருந்து 'எம்.வி.பிரின்ஸ்' என்ற சிரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் லெபனான் நாட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 8 ஆயிரம் டன் இரும்பு கொண்டுவரப்பட்டது. மேலும் கப்பலுக்கு தேவையான 220 டன் எரிபொருளும் கப்பலில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. சிரியாவை சேர்ந்த 15 மாலுமிகள் அந்த சரக்கு கப்பலில் பயணித்து வந்தனர்.

கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. பாதிப்புக்கு உள்ளான அந்த சரக்கு கப்பல் நேற்று வேகமாக மூழ்க தொடங்கியது.

இருப்பினும் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதால் எரிபொருள் கசிந்து கடலில் கலந்து விடுமோ என்ற அச்சத்தில் மாசுக்கட்டுப்பாட்டு கப்பல் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் கப்பலில் இருந்த 150 மெட்ரிக் டன் எண்ணெய் கசிய தொடங்கியுள்ளது. இந்த எண்ணெய் கசிவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலோர காவல்படை மற்றும் மங்களூர் கப்பல் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒன்றுசேர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணெய் கசிவு ஒத்திகை நடவடிக்கையில் இறங்கிய இந்திய கடலோர காவல்படை

கப்பலில் இருந்து எண்ணெய் கசிவைத் தடுக்க 'சமுத்ரா பவக்' என்ற சிறப்பு தொழில்நுட்பக் கப்பல் குஜராத் துறைமுகத்தில் இருந்து வந்துள்ளது. கடலோர காவல்படை கப்பல், 9 கப்பல்கள், 3 கடலோர காவல்படை காப்டர்கள் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

கப்பலின் அழுக்குத் தொட்டியில் இருந்து இப்போது சிறிதளவு எண்ணெய் கசிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியை சுற்றியுள்ள கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story