பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிவாசிகள் போராட்டம்


பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிவாசிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

இலவச நிலம், வீடுகள் கட்டித்தரகோரி பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆதிவாசிகள் போராட்டம் நடத்தினர்.

குடகு:

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை மற்றும் பொன்னம்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் காபி தோட்ட கூலி தொழிலாளிகள் சிலர் கடந்த பல ஆண்டுகளாக சொந்த வீடுகள் இல்லாமல் லைன் வீடுகளில்தான் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிவாசி மக்களும் சொந்த நிலம் மற்றும் வீடுகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிவாசி மக்கள் மற்றும் கூலி தொழிலாளிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புடகட்டி சங்கத்தினர், இலவச வீட்டுமனை மற்றும் வீடுகள் கட்டி தரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.

இதற்காக கடந்த 37 நாட்களாக பொன்னம்பேட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் இரவு, பகலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் இலவச நிலம் மற்றும் வீடுகள் கட்டிதரவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர்.


Next Story