இந்தி திணிப்புக்கு கண்டன ஆர்ப்பாட்டம் - கொல்கத்தாவில் அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள்...!


இந்தி திணிப்புக்கு கண்டன ஆர்ப்பாட்டம் - கொல்கத்தாவில் அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள்...!
x

இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

கொல்கத்தா,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகள் குழு, மத்திய கல்வி நிலையங்களில் இந்தியை கட்டாயமாக்குவது குறித்து பரிந்துரைத்தன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.

இந்தி மொழியை கட்டாயமாக்குவதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற கண்டன பேரணியில், இந்தியை பேசாத பல்வேறு மொழி பேரும் மக்கள் பங்கேற்றனர். அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களின் கைகளில் அண்ணா, கருணாநிதி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகள் இடம்பெற்றுஅனைவரது கவனத்தையும் ஈர்த்தன.


Next Story