மந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டம்; 18 பேர் கைது


மந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டம்; 18 பேர் கைது
x

பாடநூல் விவகாரத்தில் மந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பாடநூலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. பாடநூலில் இருந்து தேசியகவி குவெம்புவின் முக்கிய குறிப்புகள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு இடம்பெற்று உள்ளது. இதனை கண்டித்து கன்னட அமைப்பினர், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாடநூல் விவகாரம் தொடர்பாக துமகூரு மாவட்டம் திப்தூரில் உள்ள பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேசின் வீட்டின் முன்பு நேற்று தேசிய மாணவர் அமைப்பினர், காங்கிரசார் இணைந்து போராட்டம் நடத்தினர்.

அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணியும் காவி டவுசரை கையில் வைத்து கொண்டு கோஷம் எழுப்பினர். பின்னர் மந்திரி நாகேசின் வீட்டிற்குள் போராட்டம் நடத்தியவர்கள் அத்துமீறி நுழைய முயன்றதாக தெரிகிறது. இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுபற்றி அறிந்த திப்தூர் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று போராட்டம் நடத்திய 18 பேரை கைது செய்தனர். அவர்கள் வந்த 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


Next Story