பொதுமக்கள் கையில் உள்ள கருவி போராட்டம் - சுப்ரீம் கோர்ட்டு


பொதுமக்கள் கையில் உள்ள கருவி போராட்டம் - சுப்ரீம் கோர்ட்டு
x

பொதுமக்கள் கையில் உள்ள கருவி போராட்டம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

டெல்லி,

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் அண்ணமன்னடா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 2006 செப்டம்பர் 20-ம் தேதி ரவி நம்போதரி உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக ரவிக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதனிடையே, 2015-ம் ஆண்டு கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் ரவி நம்போதரி வெற்றிபெற்றார். ஆனால், தன் மீது 2006-ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை வேட்புமனுவில் குறிப்பிடாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக ரவி மீது கேரள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை 2015-ம் ஆண்டு விசாரித்த கேரள ஐகோர்ட்டு ரவி பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரவி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, வேலைநிறுத்தம் தொழிலாளர்களின் கையில் உள்ள ஆயுதத்தை போன்றது. நிறுவனத்தை மூடுதல் முதலாளிகளின் கையில் உள்ள ஆயுதத்தை போன்றது. அதேபோல், பொதுமக்களின் கைகளில் உள்ள கருவி போராட்டம். அரசாங்கங்களின் கைகளில் உள்ள கருவி போலீஸ் நடவடிக்கை. கேரள போலீஸ் சட்டம், மெட்ராஸ் போலீஸ் சட்டம் போன்ற அனைத்து மாநில சட்டங்களும் காவல்துறையை சிறப்பாக ஒழுங்குபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன. அவை கணிசமான குற்றங்களை உருவாக்குவதில்லை' என கோர்ட்டு தெரிவித்தது.


Next Story