டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிப்பு


டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2022 8:06 AM IST (Updated: 16 Jun 2022 8:42 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகளை இன்று முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை ஆஜராக அமலக்கத்துறை அழைத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் எம்பி.க்கள் , நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்தது காவல்துறை எதிர்ப்பு போராட்டம் நடத்த முயன்ற தமிழக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி காவல்துறை போராட்டத்தை தடுத்தனர்.

இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கவர்னர் மாளிகைகளை இன்று முற்றுகையிட காங்கிரஸ் கட்சியினர் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story