காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து நடுரோட்டில் டீ போட்ட போராட்டக்காரர்கள்


காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து நடுரோட்டில் டீ போட்ட போராட்டக்காரர்கள்
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டக்காரர்கள் நடுரோட்டில் டீ போட்டனர்.

மண்டியா:

கர்நாடகத்திற்கு குடிக்க நீர் போதாத நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது என வலியுறுத்தியும், தமிழகத்திற்கான காவிரி நீரை உடனடியாக நிறுத்த கோரியும் மண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஒரு பகுதியாக மண்டியா சஞ்சய் சர்க்கிளில், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க கூறிய காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு நகலை தீவைத்து எரித்தனர். மேலும் நடுரோட்டில் கற்களால் அடுப்பு மூட்டி, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவு நகல்களை எரித்து டீ போட்டு நூதன எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் டீ போட்டு போராட்டக்காரர்கள் குடித்தனர். அப்போது போராட்டக்காரர்கள், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story