அரசு நிர்வாகம் ஆனது கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய யோசனைகளால் நடத்தப்படுகிறது; பிரதமர் மோடி பேச்சு


அரசு நிர்வாகம் ஆனது கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய யோசனைகளால் நடத்தப்படுகிறது; பிரதமர் மோடி பேச்சு
x

பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அரசு நிர்வாகம் ஆனது கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய யோசனைகளால் நடத்தப்படுகிறது என கூறியுள்ளார்.

புதுடெல்லி,

குஜராத்தில் ஸ்வாகத் (தொழில் நுட்பம் பயன்படுத்தி மக்களின் குறைகளை மாநில அளவில் கவனத்தில் கொள்ளும் திட்டம்) என்ற திட்டத்தின் 20-வது ஆண்டுதின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு காணொலி காட்சி வழியே பேசினார்.

இந்த நிகழ்ச்சி குஜராத்தின் காந்தி நகரில், முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் முன்னிலையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, அரசு நிர்வாகம் ஆனது கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய யோசனைகளால் நடத்தப்படுகிறது என பேசி உள்ளார்.

இந்த திட்ட தொடக்கம் ஆனது, மக்களின் குறைகளை தீர்க்க, எப்படி தொழில் நுட்பம் திறமையாக பயன்படுத்தப்படுகிறது என்று விளக்குகிறது. முறையான தீர்வு காண்பதும் உறுதி செய்யப்படுகிறது.

20 ஆண்டுகள் ஆன பின்பும், ஸ்வாகத் என்றால் வாழ்வது எளிது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளதுடன், எளிதில் நிர்வாக பலன்களை சென்றடைய செய்கிறது என கூறியுள்ளார். இந்த திட்டத்தில் கடந்த காலத்தில் பலன் பெற்றவர்களுடன் அவர் உரையாடினார்.

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரலில், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தபோது, ஆன்லைன் வழியே குறைகளை தீர்க்கும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திறமையாக மற்றும் சரியான நேரத்தில் குடிமக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கை இந்த திட்டம் முதன்மையாக கொண்டது.


Next Story