பி.யூ.சி. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது


பி.யூ.சி. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

கார்கலா அருகே பி.யூ.சி. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பி.யூ.சி.மாணவி

உடுப்பி-

கார்கலா அருகே பி.யூ.சி. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த

2 வாலிபர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பி.யூ.சி.மாணவி

உடுப்பி மாவட்டம் கார்கலா டவுன் நெஞ்சூர் போப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாள். அவள் அப்பகுதியில் உள்ள தனியார் பி.யூ.கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். இந்தநிலையில் மாணவி கல்லூரி செல்லும் போது அதேப்பகுதியை சேர்ந்த சுஜித் பூஜாரி பேசி வந்துள்ளார். இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேசி வந்தனர். மாணவியை சுஜித் உடுப்பி, கார்கலா உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.

மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மாணவி வீட்டிற்கு அடிக்கடி சுஜித் சென்று வந்துள்ளார். அப்போது மாணவியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி கல்லூரிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சுஜித் வந்தார். பின்னர் அவளை உடுப்பிக்கு சுஜித், மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

சுற்றுலா தளம்

அங்கு சுற்றுலா தளங்களை அவர்கள் 2 பேரும் சுற்றி பார்த்தனர். பின்னர் சுஜித் மற்றும் மாணவி அறை எடுத்து தங்கினர். இதையடுத்து மாணவியை சுஜித் பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அங்கு சுஜித்தின் நண்பர் அபிநந்தன் வந்தார். அவரும் மாணவிைய மிரட்டி பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியிடம் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இந்தநிலையில், சிறுமி வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாணவியிடம் கேட்டனர். அப்போது மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி பெற்றோரிடம் கதறி அழுதாள். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கார்கலா டவுன் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

2 பேர் கைது

அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவான சுஜித், அபிநந்தன் ஆகிய 2 பேரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் கார்கலா டவுனில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு பதுங்கி இருந்த சுஜித், அபிநந்தன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் உடுப்பி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story