பஞ்சாப்: ஆம் ஆத்மி அரசு ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை - பாஜக தலைவர் அஸ்வனி சர்மா

பஞ்சாப்: ஆம் ஆத்மி அரசு ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை - பாஜக தலைவர் அஸ்வனி சர்மா
x

பஞ்சாப்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருவதாக பாஜக மாநில தலைவர் அஸ்வனி சர்மா தெரிவித்துள்ளார்.

சண்டிகர்,

பஞ்சாப்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருவதாக பாஜக மாநில தலைவர் அஸ்வனி சர்மா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மா இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,"பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் பிற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை.

அமைதி, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகள் தலை தூக்குகின்றன. கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்காத நாட்களே இல்லை. ஒவ்வொரு பஞ்சாபியும் தற்போது பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்.

பஞ்சாப்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. ஆம் ஆத்மி அரசு பதவியேற்று 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

பஞ்சாப்பில் இளைஞர்களுக்கு வேலை இல்லை, இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற முதல்-மந்திரி பகவாந்த் மானின் வாக்குறுதி வெறும் வெற்று வாக்குறுதியாகும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story