பஞ்சாப் மந்திரிசபை விரிவாக்கம்: 5 பேர் புதிய மந்திரியாக பதவியேற்பு..!


பஞ்சாப் மந்திரிசபை விரிவாக்கம்: 5 பேர் புதிய மந்திரியாக பதவியேற்பு..!
x

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான், தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்து உள்ளார்.

சண்டிகார்,

பஞ்சாபில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று பகவந்த் மான் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். மேலும் 17 பேர் மந்திரிகளாகவும் பொறுப்பேற்றனர்.

தற்போது பகவந்த் மான், தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்து உள்ளார். அவர் பதவியேற்ற பின்பு செய்யப்படும் முதல் மந்திரிசபை மாற்றம் இதுவாகும். புதிதாக 5 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் முதல் முறையாக சட்டசபையில் காலடி எடுத்து வைத்துள்ள எம்.எல்.ஏ.க்களாவர். அமன் அரோரா என்பவர் மட்டும் இருமுறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

புதிய மந்திரிகளுக்கு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


Next Story