எளிமையாக நடைபெற்ற பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானின் இரண்டாவது திருமணம்! மருத்துவரை கரம்பிடித்தார்..!


எளிமையாக நடைபெற்ற பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானின் இரண்டாவது திருமணம்! மருத்துவரை கரம்பிடித்தார்..!
x

மருத்துவர் குா்பிரீத் சிங்கை எளிமையான முறையில் பகவந்த் மான் இன்று திருமணம் செய்து கொண்டார்.

சண்டிகர்,

பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் - மருத்துவர் குா்பிரீத் சிங் திருமணம் இன்று சீக்கிய பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

முன்னதாக 48 வயதான பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் மற்றும் மருத்துவர் குா்பிரீத் சிங்(30 வயது) இடையேயான திருமணம் குறித்து நேற்று திடீரென அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், மருத்துவர் குா்பிரீத் சிங்கை சண்டீகரில் உள்ள இல்லத்தில் எளிமையான முறையில் பகவந்த் மான் இன்று திருமணம் செய்து கொண்டார்.


இது பகவந்த் மானின் இரண்டாவது திருமணமாகும். 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பகவந்த் மானுக்கு ஆதரவாக அவரின் மனைவி இந்தா்பிரீத் கவுர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டாா். எனினும், அடுத்த ஆண்டிலேயே அவா்கள் விவாகரத்து பெற்றனா். இந்தா்பிரீத் கவுர் இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

அவரது முதல் திருமணம் கடந்த 2015-இல் முறிந்தது. முதல் மனைவி மூலம் அவருக்கு 21 வயதில் ஒரு மகளும், 17 வயதில் மகனும் உள்ளனா். கடந்த மாா்ச் மாதம் பகவந்த் மான் பஞ்சாப் முதல் மந்திரியாகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது மகளும், மகனும் அமெரிக்காவில் இருந்து வந்து பங்கேற்றனா்.


Next Story