பஞ்சாப்: வளர்ப்பு நாயை கேலி செய்த 5 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய உரிமையாளர்


பஞ்சாப்: வளர்ப்பு நாயை கேலி செய்த 5 வயது சிறுவனை சரமாரியாக தாக்கிய உரிமையாளர்
x

நாயின் உரிமையாளர் சிறுவனை தாக்கிய சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொகாலி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 சிறுவர்கள் டியூசன் வகுப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சிறுவர்களைப் பார்த்து நாய் குறைக்க தொடங்கியுள்ளது.

அதில் ஒரு 5 வயது சிறுவன் நாயைப் பார்த்து குறைப்பது போல் கேலி செய்துள்ளான். இதனால் கோபமடைந்த நாயின் உரிமையாளர், அந்த சிறுவனைப் பிடித்து சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். மேலும் அந்த சிறுவனை தரையில் தூக்கி வீசி, அவனை காலால் எட்டி மிதித்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், சிறுவனை தாக்கிய நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story