பஞ்சாப்: 424 பேருக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தரவு


பஞ்சாப்: 424 பேருக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! முதல்-மந்திரி பகவந்த் மான் உத்தரவு
x

இந்த 424 பேரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அடங்குவர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் 424 முக்கிய மனிதர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது.

இந்த 424 பேரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த புதிய உத்தரவு இன்று முதல் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 424 பேருக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

அதன்படி, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், இன்று மாநில ஆயுதப்படை போலீஸ் படையின் சிறப்பு டிஜிபியிடல் தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம், முன்னாள் மந்திரிகள், முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் பிற தலைவர்கள் உட்பட 184 பேரின் பாதுகாப்பை திரும்பப் பெற பஞ்சாப் அரசு உத்தரவிட்டது. அத தொடர்ச்சியாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி, கேப்டன் அமரீந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பர்தாப் சிங் பஜ்வாவேரின் மனைவி ஆகியோரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு கடந்த மாதம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story