பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம்.... பிரதமர் மோடி டுவீட்
புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் தொடங்கியது.
ஒடிசா,
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் ஜெகன்நாதர் கோயில் உள்ளது. இங்கு உள்ள ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரை ஆகியோர் தனித்தனியாக மூன்று தேர்களில் பூரி நகரத்தை சுற்றி அருள் பாலிக்க உள்ளனர்.
ஒன்பது நாட்கள் நடைபெறும் தேரோட்ட திருவிழாவின் முதல்நாளான இன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர். தேரோட்ட திருவிழா நன்னாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவீட்டரில், அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி, நல்ல உடல்நலம் கிடைக்கவும், ஜெநகநாதரின் அருளாசி கிடைக்கவும் பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story