உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார் பி.வி.சிந்து..!!


உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார் பி.வி.சிந்து..!!
x

உள்துறை மந்திரி அமித்ஷாவை பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேரில் சந்தித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் விடுதலை தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அம்மாநிலத்திற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் தெலுங்கானா மாநில பாஜக மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இதனிடையே ஐதராபாத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், "பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை ஐதராபாத்தில் இன்று சந்தித்தேன். விளையாட்டுத் திறமைக்காக அவர் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தில் தேசம் பெருமிதம் கொள்கிறது. அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கிறது" என்று அதில் தெரிவித்துள்ளார். என பதிவிட்டுள்ளார்.


Next Story