இந்து சமூகத்தை அவமதிப்பதில் ராகுல்காந்தி எப்போதும் பெருமிதம் கொள்கிறார்: உத்தரகாண்ட் முதல்-மந்திரி


உத்தரகாண்ட் முதல்-மந்திரி
x

ராகுல்காந்திக்கு கடவுள் ஞானத்தை தரட்டும் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.

ராஞ்சி,

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியது குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி அழைத்த விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் இந்து சமூகத்தை அவமதிப்பதில் அவர் பெருமிதம் கொள்கிறார். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற கண்ணியமான பதவி வகிக்கிறார். கடவுள் அவருக்கு ஞானத்தை தரட்டும்.

கன்வர் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. ஹரித்துவாரில் ஆண்டுதோறும் முக்கிய கூட்டம் நடத்துகிறோம். இந்த ஆண்டும் கூட்டம் நடத்துவோம். கடந்த ஆண்டு 4 கோடிக்கும் அதிகமான சிவ பக்தர்கள் இங்கு வந்தனர். இந்த ஆண்டு வரவிருக்கும் அனைவரையும் வரவேற்க நல்ல ஏற்பாடுகளை செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story