பண மதிப்பிழப்பின் ஒரே சாதனை இதுதான்... ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு


பண மதிப்பிழப்பின் ஒரே சாதனை இதுதான்... ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு
x

2016- ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதுடெல்லி,

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.

கருப்பு பணம், கள்ள நோட்டுக்களை தடுத்து பயங்கரவாதத்திற்கு நிதி செல்வதை தடுப்பது போன்ற நோக்கத்திற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை மறுத்து அரசை விமர்சித்து வருகின்றன. பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தி விட்டதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.

இந்த நிலையில், 2016- ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை மேற்கோள் காட்டி, மத்திய அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, " நாட்டின் பொருளாதாரத்தை மூழ்கடித்துததான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரே துரதிருஷ்டவசமான சாதனை" என்று சாடியுள்ளார்.


Next Story