பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா குடும்பத்தினருடன் ராகுல் காந்தி நாளை சந்திப்பு..!

Image Courtesy : ANI
சித்து மூஸ் வாலா மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
சண்டிகர்,
பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.
இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஞ்சாப் முதல்-மந்திாி பகவந்த் மான், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சித்து மூஸ் வாலாவின் குடும்பத்தினரை பஞ்சாப்பில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நாளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
Related Tags :
Next Story






