பெங்களூருவில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


பெங்களூருவில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வடகர்நாடக மாவட்டங்களில் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கடந்த வாரம் ராய்ச்சூர், கலபுரகி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இன்று (28-ந்தேதி) முதல் 30-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பெங்களூரு, பெங்களூரு புறநகர், சிக்கபள்ளாப்பூர், கோலார், ராமநகர், மண்டியா, ஹாசன் மற்றும் மைசூரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அதுபோல் 3 நாட்களும் குடகு, கலபுரகி, ராய்ச்சூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story