ராஜஸ்தான்: கார்-லாரி மோதலில் 9 பேர் பலி


ராஜஸ்தான்:  கார்-லாரி மோதலில் 9 பேர் பலி
x

ராஜஸ்தானில் விபத்து நடந்த இடத்திற்கு கரவ்லி மாவட்ட எஸ்.பி. பிரஜேஷ் ஜோதி உபாத்யாய் மற்றும் கலெக்டர் நீலப் சக்சேனா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கரவ்லி,

ராஜஸ்தானின் கரவ்லி மாவட்டத்தில் மந்திரயால் மார்க் பகுதியில் துந்தபுரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றும், லாரியும் திடீரென மோதி விபத்தில் சிக்கின.

இந்த சம்பவத்தில் சிக்கி 6 பெண்கள், 2 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை கரவ்லி மாவட்ட எஸ்.பி. பிரஜேஷ் ஜோதி உபாத்யாய் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் மற்றும் கலெக்டர் நீலப் சக்சேனா ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்பின்பு உயிரிழந்த நபர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கரவ்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்புடைய நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் சரிவர தெரியவில்லை. எனினும், இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story