காங்கிரஸ் கட்சி தலைவராக அசோக் கெலாட் தேர்வானால் ராஜஸ்தானின் அடுத்த முதல்-மந்திரி யார்? மந்திரி ராஜேந்திர குதா பதில்


காங்கிரஸ் கட்சி தலைவராக அசோக் கெலாட் தேர்வானால் ராஜஸ்தானின் அடுத்த முதல்-மந்திரி யார்? மந்திரி ராஜேந்திர குதா பதில்
x

இந்த விவகாரத்தில், கட்சி மேலிடம் யாரை ஆட்சி அமைக்க தேர்வு செய்தாலும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பார்கள்.

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. கட்சித் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் ஆகியோர் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், அம்மாநிலத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜய் மேகன் மற்றும் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பார்கள் என்ற செய்தி வெளியானது.

இந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராஜஸ்தான் மாநில பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ராஜேந்திர குதா கூறுகையில்;-

அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராகி, முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தால், அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சச்சின் பைலட்டை ஆதரிப்பார்கள்.

மேலும், இந்த விவகாரத்தில், கட்சி மேலிடம் யாரை ஆட்சி அமைக்க தேர்வு செய்தாலும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பார்கள். சச்சின் பைலட் தான் அடுத்த முதல் மந்திரியாக வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story