ராஜஸ்தான்: ரூ.12 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து சென்ற கொள்ளையர்கள்


ராஜஸ்தான்: ரூ.12 லட்சத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து சென்ற கொள்ளையர்கள்
x

கோப்புப்படம்

ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், பயங்கர ஆயுதங்களால் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கையோடு எடுத்து சென்று விட்டனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சர்சவுன்ப் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்தப்பகுதி மக்கள் இந்த ஏ.டி.எம்.மை பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், பயங்கர ஆயுதங்களால் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கையோடு எடுத்து சென்று விட்டனர்.இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து வங்கி அதிகாரி அளித்த புகாரின்பேரில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த எந்திரத்தில் ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story