Normal
2024 ஜனவரிக்குள் அயோத்தி கோயிலில் ராமர் சிலை நிறுவப்படும்- வி.எச்.பி. தகவல்

Image Courtesy : ANI
2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும் என்று, விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.
அயோத்தி,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில்.2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் அயோத்தி ராமர் கோயில் கருவறையில் ராமர் சிலை நிறுவப்படும் என்று, விஸ்வ இந்து பரிசத் தெரிவித்துள்ளது.
இது குறித்து விஸ்வ இந்து பரிசத் தலைவர் சரத் சர்மா கூறியதாவது ;
ஜூன் 1-ம் தேதி ராமர்கோயில் கருவறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கருவறை சன்னதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
உத்தர பிரதேச துணைமுதல் மந்திரி, ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.அயோத்தி கோயிலில் 2024 ஜனவரிக்குள் ராமர் சிலை நிறுவப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






