மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட திக் திக் அனுபவம்; நடந்தது என்ன...?


மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட திக் திக் அனுபவம்; நடந்தது என்ன...?
x
தினத்தந்தி 22 July 2023 10:50 AM GMT (Updated: 23 July 2023 6:40 AM GMT)

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக பெங்களூரில் ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற பெண் தனது வீடு திரும்ப ரேபிடோ பைக்கில் பயணித்தபோது அதன் ஓட்டுநர் சுயஇன்பம் செய்ததோடு ஐ லவ் யூ என கூறி உள்ளார்.

பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூரு டவுன் ஹாலில் நேற்று மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பெங்களூர் தெற்கு பகுதியில் வசித்து வரும் பெண் சமூக ஆர்வலர் ஒருவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அவர் தனது வீட்டுக்கு கிளம்பினார்.

அப்போது அவர் ரேபிடோ பைக் செயலி மூலம் ஆட்டோ முன்பதிவு செய்தார். ஆனால் பல ஆட்டோக்கள் அவரது முன்பதிவை கேன்சல் செய்தன. இதனால் ரேபிடோ பைக் செயலி மூலம் பைக் முன்பதிவு செய்தார்.

அப்போது பைக் ஓட்டிய நபர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பயணி பின்னால் இருக்க சுயஇன்பம் செய்துள்ளார். இதனால் அந்த பெண் பயணி அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் அவர் தனது பாதுகாப்பு கருதி சத்தம் எதுவும் போடாமல் வீட்டுக்கு இறங்கி சென்றார்.

அதன்பிறகு அந்த பெண் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மணிப்பூர் வன்முறையை கண்டித்து பெங்களூர் டவுன்ஹாலில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு வீட்டுக்கு ரேபிடோ பைக்கில் புறப்பட்டேன்.

ஆச்சரியம் என்ன வென்றால் டிரைவர் வேறு பைக்கில் வந்தார். இருப்பினும் எனது முன்பதிவை செயலியில் சரிபார்த்தேன். அது சரியாக இருந்ததால் பைக்கில் பயணித்தேன்.

இந்த வேளையில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது ஓட்டுனர் ஒரு கையால் பைக் ஓட்டினார். மேலும் பைக் ஓட்டியபடியே சுயஇன்பம் செய்தார். இந்த வேளையில் நான் பயந்தாலும் எனது பாதுகாப்பு கருதி அமைதியாக இருந்தேன். மேலும் நான் இறங்கி செல்ல வேண்டிய இடத்துக்கு 200 மீட்டருக்கு முன்பே நான் இறங்கிவிட்டேன்.

இதையடுத்து அந்த நபர் எனக்கு போன் செய்தார். மேலும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்தார். அதில் ஐ லவ் யூ என கூறி இருந்தார். நான் அவரது செல்போன் எண்ணை பிளாக் செய்துவிட்டேன்.

தற்போது அவர் வேறு எண்களில் இருந்து எனக்கு போன் செய்கிறார். ரேபிடோ தனது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்'' என தெரிவித்து உள்ளார்ர்.

மேலும் போன் செய்த பிறகு அந்த ஓட்டுநர் வாட்ஸ்அப்பில் செய்த மெசேஜை அவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது டுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் அந்த ஓட்டுநர் மாலை 6.46 மணிக்கு பெண்ணுக்கு ‛ஹாய்' என வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்துள்ளார். மேலும் ஹார்ட்டின் வடிவம் அடங்கிய 2 இமோஜிகளையும் அனுப்பி உள்ளார் என கூறி இருந்தார்.


Next Story