கருணை கொலைக்கு தயார் - கேரளாவை அதிரவைத்த போஸ்டர்


கருணை கொலைக்கு தயார் - கேரளாவை அதிரவைத்த போஸ்டர்
x

கேரளாவில் முதியோர் பென்ஷன் வழங்காததால் பாதிக்கப்பட்ட தம்பதி கருணை கொலைக்கு தயார் என்று போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் அடிமாலி அருகே மலை கிராமத்தில் வசிக்கும் தம்பதி சிவதாசன் மற்றும் ஓமனா. கடந்த 5 மாதங்களாக இவர்களுக்கு முதியோர் பென்ஷன் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதி, 'கருணை கொலைக்கு தயார்' என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கேரளாவில் அதிகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விதவை, முதியோர் உள்ளிட்ட பென்ஷன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

1 More update

Next Story