விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தயார் - மந்திரி ரோஜா பேச்சு


விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தயார் - மந்திரி ரோஜா பேச்சு
x

ஆந்திராவில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்யத் தயாராக இருக்கிறேன், என்று மந்திரி ரோஜா பேசினார்.

திருப்பதி,

சித்தூர் மாவட்டம் நகரி அரசு கல்லூரி அருகில் உள்ள மாநில விளையாட்டு ஆணைய உள்விளையாட்டு அரங்கில் திருப்பதி மற்றும் சித்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

போட்டியை இளைஞர் நலம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி ஆர்.கே.ரோஜா பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்து செஸ் விளையாடினார்.

அப்போது ரோஜா பேசியதாவது:-

செஸ் விளையாட்டு மனிதனின் அறிவுத்திறனை வளர்க்கும். சிந்திக்கும் திறனை தூண்டும். இதனாலேயே எனக்கும் செஸ் விளையாட்டு பிடிக்கும். வாழ்க்கையில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் வியூகங்களை வகுக்க மனிதனுக்கு புத்திசாலித்தனம் தேவை. அதற்காக, இதுபோன்ற விளையாட்டுகள் மூலம் வியூகம் வகுக்கும் சக்தியைப் பெற முடியும்.

மாநில விளையாட்டுத்துறை மந்திரி என்ற முறையில், எனது தலைமையில் இதுபோன்ற ஆரோக்கியமான செஸ் போட்டியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நகரி தொகுதியில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடப்பது வரவேற்கத்தக்கது.

ஆந்திராவில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்யத் தயாராக இருக்கிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஆந்திர விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்க ேவண்டும். ஆந்திர மாநிலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினா்.

நிகழ்ச்சியில் நகரி நகர மன்ற தலைவர், துணைத்தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், செஸ் வீரர்கள், செஸ் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story