செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது


செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது
x

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி அருகே செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில் எர்ரவாரி பாளையம் பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கடத்தல்காரர்கள் சிக்கினர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்களில் முக்கிய குற்றவாளியான சங்கர் என்பவர் மீது கடப்பா மாவட்டத்தில் ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கவுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.71 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 6 இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story